மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை மின்தடை


மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 3 Jan 2022 1:42 AM IST (Updated: 3 Jan 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மதுரை, 

பராமரிப்பு பணி காரணமாக மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை பெருநகர் வடக்கு மின்செயற்பொறியாளர் மலர்விழி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மதுரை வடக்கு கோட்டத்திற்குட்பட்ட அவனியாபுரம் மற்றும் இலந்தைகுளம் துணை மின்நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், ஆம்பளகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி காடர்ன், ராம்நகர், பி.கே.பி. நகர், ஆதீஸ்வரன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மண்டேலா நகர்

மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பாப்பாகுடி, டி.மார்ட் அருகே உள்ள பகுதிகள், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், தபால் பயிற்சி கல்லூரி, போலீஸ் குடியிருப்பு, சின்ன உடைப்பு, மதுரை விமான நிலைய குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
 இத்தகவலை மின்செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்

Next Story