ராஜேந்திர பாலாஜி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது நில மோசடி புகார்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் கொடுத்த புகார் மனுவில், தனது குடும்ப பூர்வீக சொத்தினை முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 அ.தி.மு.க. நிர்வாகிகள் கடந்த 2019-ம் ஆண்டு மோசடியாக போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்துள்ளதாகவும், அதுபற்றி கேட்டபோது தன்னையும் தனது குடும்பத்தாரை மிரட்டுவதாகவும், எனவே உரிய முறையில் ஆய்வு செய்து தனது குடும்ப சொத்தை மீட்டுத் தருமாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story