கர்நாடகத்தில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 1,187 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கா்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

6 பேர் உயிரிழந்தனர்

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 911 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 1,187 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 9 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 346 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 275 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 60 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது.

  புதிதாக பெங்களூரு நகரில் 923 பேரும், பெலகாவியில் 12 பேரும், தட்சிண கன்னடாவில் 63 பேரும், தார்வாரில் 15 பேரும், ஹாசனில் 6 பேரும், குடகில் 12 பேரும், மண்டியாவில் 10 பேரும், மைசூருவில் 20 பேரும், துமகூருவில் 12 பேரும், உடுப்பியில் 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் 3 பேரும், தட்சிண கன்னடா, துமகூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையினர் அச்சம்

  கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 1,033 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று அது மேலும் அதிகரித்து 1,187 ஆக பதிவாகியுள்ளது. வைரஸ் பரவல் நாளுக்குள் அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story