ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையம்,
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பில் அமைந்துள்ள ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அபய ஸ்கத்த ஆஞ்சநேயர், கட்டையாபுரம் அனுமன் கோவிலில் ஆஞ்சநேயர், தேசபந்து திடலில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள 18 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 2022 புத்தாண்டை குறிக்கும் விதமாக 2022 வடைமாலை சாத்தப்பட்டது.
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில் உள்ள அபய ஸ்கத்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டியில் அனுமார் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
மேலும் வேட்டை வெங்கடேசப்பெருமாள் கோவில், கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடை மாலை அணிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் செய்திருந்தனர்.
சிவகாசி
சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஈஞ்சார்விலக்கு பகுதியில் அமைந்துள்ள அபயவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு 1008 வடை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதே போல் சிவகாசி அய்யப்பன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. சிவகாசி பஸ் நிலையத்தில் உள்ள துர்கைபரமேஸ்வரி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வடைமாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story