மேட்டூரில் டேங்கர் லாரி கவிழ்ந்தது


மேட்டூரில் டேங்கர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 3 Jan 2022 2:36 AM IST (Updated: 3 Jan 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூரில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

மேட்டூர்:
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து இரும்பு தூள் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி மேட்டூர் சமத்துவபுரம் பகுதியில் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் சுவர் மீது மோதியது. இந்த விபத்தால் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. விபத்து குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story