3-வது நாளாக வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை


3-வது நாளாக வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை
x
தினத்தந்தி 3 Jan 2022 2:39 AM IST (Updated: 3 Jan 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் 3-வது நாளாக நேற்று கன்னியாகுமரி கடற்கரை வெறிச்ேசாடியது.

கன்னியாகுமரி:
ஒமைக்ரான் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் 3-வது நாளாக நேற்று கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது.
தடை
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவது வழக்கம்.
தற்போது கொரோனா தொற்று ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது. இதை தடுக்க குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாதலங்களுக்கு கடந்த 31-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 
களை இழந்த புத்தாண்டு
பொதுவாக ஆங்கில புத்தாண்டை கொண்டாட கன்னியாகுமரி கடற்கரைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், 31-ந்தேதியன்று கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தும் நடைெபறவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
ஆங்கில புத்தாண்டு பிறப்பும் களை இழந்தது. இருந்த போதிலும் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கேயே தங்கினர். அதில் பெரும்பாலானவர்கள் நேற்று முன்தினம் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். ஆனால் யாரும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
வெறிச்சோடியது
ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். ஆனால் சூரியோதயத்தை காண திரிவேணி சங்கமம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனால் கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் இல்லாமல் 3-வது நாளாக நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story