பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட வேண்டும் அதிகாரிகளுக்கு, பசவராஜ் பொம்மை உத்தரவு
பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
உறுதி பூண்டுள்ளது
பெங்களூருவின் வளர்ச்சி குறித்து நகர எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
மழை காலம் முடிந்த பிறகும் இன்னும் பெரும்பாலான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். பெங்களூருவின் வளர்ச்சிக்கு அரசு தீட்டும் திட்டங்களை அதிகாரிகள் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். பெங்களூருவை திட்டமிட்ட நகரமாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்காக சாலைகள் அகலப்படுத்தப்பட வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனிஜினீயர்கள் நியமனம்
பெங்களூருவில் 700 கிலோ மீட்டர் நீள சாலைகளில் பள்ளங்களை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும். வருகிற மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். வருகிற 31-ந் தேதிக்குள் பெங்களூருவில் தெரு விளக்குகளை மாற்றிவிட்டு எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்படும். பெங்களூருவில் புதிதாக 7 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
பெங்களூருவில் குத்தகை அடிப்படையில் 150 என்ஜினீயர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும். டி.டி.ஆர். அதாவது சாலை அமைக்கும் பணிகளுக்கு கையகப்படுத்தும் தனியார் நிலத்திற்கு இணையாக வேறு இடத்தில் இடம் ஒதுக்குவதில் தற்போது உள்ள விதிமுறைகளில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். டெண்டர் சூர் திட்டத்தின் கீழ் சாலைகளை தரம் உயர்த்தும் பணிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.1,500 கோடி ஒதுக்குவதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்
முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், பஸ், ஆட்டோ, கடைகள், மெட்ரோ ரெயில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story