பெங்களூருவில் வாடகை கார்களில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் - அரசுக்கு, மாநகராட்சி பரிந்துரை
பெங்களூருவில், கொரோனா பரவலை தடுக்க வாடகை கார்களில் பயணம் செய்ய 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு, மாநகராட்சி பரிந்துரை செய்து உள்ளது.
பெங்களூரு:
மாநகராட்சி பரிந்துரை
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாடகை கார், ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாடகை கார், ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என்று மாநகராட்சி, அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது.
ரெட் அலர்ட்
மேலும் பெங்களூருவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை சுற்றுலா பயணிகள் கட்டாயம் கொண்டு வர அரசு உத்தரவிட வேண்டும் என்றும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
அதுபோல ஒரு பகுதியில் 2 சதவீதம் மேல் பாதிப்பு இருந்தால் அப்பகுதியை ஆரஞ்சு அலர்ட் பகுதியாகவும், 3 சதவீதம் பாதிப்பு இருந்தால் ரெட் அலர்ட் பகுதியாகவும் அறிக்கவும் அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்து உள்ளது.
Related Tags :
Next Story