வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி- அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்


வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி- அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Jan 2022 3:51 AM IST (Updated: 3 Jan 2022 3:51 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.

ஈரோடு
ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர்.
திருவிழா
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த 28-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. தினமும் பெண்கள் கோவிலின் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். பெண்கள் கைகளில் அக்னி சட்டிகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தார்கள். முளைப்பாரி எடுத்து வந்தும் பெண் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். விழாவையொட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாவிளக்கு பூஜை
வருகிற 4-ந் தேதி மாலை 4 மணிக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி காலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது. 6-ந் தேதி காலை 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

Next Story