சரக்கு வேன் மரத்தில் மோதியது- 4 பெண்கள் பலி
மராட்டியத்தில் சரக்கு வேன் மரத்தில் மோதியது- 4 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் சரக்கு வேன் மரத்தில் மோதி ஆரஞ்சு பழம் பறிக்க சென்ற 4 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேன் மரத்தில் மோதியது
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் மெகாபா பகுதியில் இருந்து இசாப்பூருக்கு ஆரஞ்சு பழம் பறிக்க கூலி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது. வேனில் அம்பாடா பகுதியை சேர்ந்த 9 தொழிலாளர்கள் இருந்தனர். இதில் சரக்கு வேன் கடோல் ரோட்டில், காட்டன் மில் அருகே சென்ற போது அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
4 பெண்கள் பலி
தகவல் அறிந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மனிஷா(38), மஞ்சுளா(40), கலாதாய்(50), மஞ்சுளா வசந்த்(50) ஆகிய 4 பெண் தொழிலாளர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். படுகாயமடைந்த டிரைவர், கிளினர் உள்பட 7 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சரக்கு வேன் மரத்தில் மோதி பெண் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் நாக்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------
Related Tags :
Next Story