பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்
பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
குத்தாலம்:-
பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
பா.ஜனதா செயற்குழு கூட்டம்
குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் கிழக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான வக்கீல் வினோத் தலைமை தாங்கினார். மாநில பிரசார பிரிவு செயலாளர் பஞ்சு அசோகன், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புசாரா மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். இதில் பா.ஜனதா மயிலாடுதுறை மாவட்ட பார்வையாளர் பேட்டை.சிவா கலந்து கொண்டு பேசினார்.
இதில் தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் தேவேந்திரன், விஸ்வநாதன், வினோத், தமிழரசன், சாமிநாதன், ரவிச்சந்திரன், கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி தலைவர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார்.
சீர்காழி
இதேபோல் சீர்காழியில் பா.ஜனதா கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீர்காழி நகர தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநில பொறுப்பாளர் செல்வம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மயிலாடுதுறை மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சீர்காழி நகர் பகுதியில் கஞ்சா, சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர், ராஜ்மோகன், முருகேசன், வெற்றிலைமுருகன், சதீஸ், ஸ்ரீராம், சுந்தரவடிவேலு, ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நடராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story