மாமல்லபுரம் நாட்டிய விழாவில் நடிகரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களால் பரபரப்பு


மாமல்லபுரம் நாட்டிய விழாவில் நடிகரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2022 7:07 PM IST (Updated: 3 Jan 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் நடிகர் முகேனை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. நேற்று 10-ம் நாள் விழாவை முன்னிட்டு பரத நாட்டியம் மற்றும் மெல்லிசை குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.

அப்போது விழாவில் திரைப்பட நடிகர் முகேன், கதாநாயகிகள் மீனாட்சி, பிரிகிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் இருந்து கீழே இறங்கி செல்ல முயன்ற நடிகர் முகேனை அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் முகேன் அங்கிருந்து வெளியேர முடியாமல் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்த சுற்றுலாத்துறையினர் ஒருவழியாக நடிகர் முகேனை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கூட்டத்தில் சிக்கிய 2 ரசிகர்களின் செல்போன்கள் திருடு போனது. நாட்டிய விழாவில் செல்பி மோகத்தால் ரசிகர்கள் செய்த இடையூறு சுற்றுலா பயணிகளிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியது.


Next Story