ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
மதுரை, ஜன.4-
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி அவனியாபுரத்திலும், 15-ந் தேதி பாலமேட்டிலும், 16-ந்் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள காளைகளுக்கு உடற்தகுதி சான்று வழங்கும் பணி மதுரை பழங்காநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் நேற்று தொடங்கியது.
காளைகளின் முக்கிய தகுதியாக காளைகள் நாட்டு மாடுகளாக இருத்தல் வேண்டும், காளைகள் 3½ வயதிற்கு மேற்பட்டதாகவும், குறைந்தபட்சம் 116 செ.மீ. உயரத்துடனும் இருக்க வேண்டும் என்பதை தகுதியாக கொண்டு அதன் அடிப்படையில் காளைகளுக்கு பரிசோதனை நடைபெற்றது.
காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனை முடிவடைந்த பின்னர் காளை மற்றும் காளை உரிமையாளரின் புகைப்படம், உரிமையாளரின் ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்பித்த பின் காளைகளுக்கான உடற்தகுதி சான்று ரசீது வழங்கப்பட்டது.
இதனையடுத்து காளைகளுக்கான உடற்தகுதி சான்றிதழ் அடிப்படையில் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
40 காளைகள்
நேற்று நடைபெற்ற உடற்பரிசோதனை சான்று வழங்கும் முகாமில் 40 காளைகளுக்கு உடற்தகுதி சான்று வழங்கப் பட்டது. பரிசோதனையை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நடராஜ் குமார், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், கால்நடை டாக்டர் ஜெய கோபி ஆகியோர் செய்தனர்.
Related Tags :
Next Story