வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2022 7:29 PM IST (Updated: 3 Jan 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
மதுரை அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் கொலை
மதுரை சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரேம் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி களை கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ் கரன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் கண்ணன் (22), அருண்குமார் (21), ரமேஷ் (23), மணிகண்டன் (25), தர்ஷன் (21) ஆகியோர் பிரேமை கொலை செய்தது தெரியவந்தது. 
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் செல்போன் பிரச்சினையால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் கூறினர்.
எச்சரிக்கை
இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில், ஏரிகரைகளில் அமர்ந்து மதுபானம் குடிப்பது, பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக கும்பலாக செயல்படுவது, பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை அதி விரைவாகவும் பயமுறுத்தும் வகையிலும் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதும், பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
மேலும் இளைஞர்கள் கெட்ட செயல்களுக்கு அடிமை யாகாமல், போதைக்கு அடிமையாகாமல் தங்களை நல் வழியில் ஈடுபடுத்தி இந்த சமுதாயத்தினை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

Next Story