கிரைண்டரில் மாவு அரைக்கும்போது பெண் திடீர் சாவு
சென்னை மணலியில் கிரைண்டரில் மாவு அரைக்கும்போது பெண் திடீர் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர் பவுலினா (வயது 43). இவர், அதே பகுதியில் விமலா என்பவரது வீட்டில் மாவு அரைக்கும் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பவுலினா திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், பவுலினா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுபற்றி பவுலினாவின் உறவினர்களுக்கு விமலா தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், பவுலினாவுக்கு இறுதிச்சடங்கு செய்து உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதற்கிடையில் பவுலினா உடலில் காயங்கள் இருப்பதாகவும், இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் எனவும் மணலி போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பவுலினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பவுலினா, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியதாக விமலா தெரிவித்தார். பவுலினா சாவில் மர்மம் இருப்பதால் அவர், கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்தாரா ? அல்லது மாரடைப்பில் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story