32 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி
திருவள்ளூர் பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில் 32 அடி உயரத்தில் அமைந்துள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தங்க கவச அலங்காரம் அணிவித்தும், 1,800 வடை மாலை செலுத்தியும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அப்போது பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 66 ஆயிரம் வடை மாலை சாற்றி சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.
சாமி தரிசனம்
இதனை திருபந்தியூர், வயலூர், பண்ணூர், சுங்குவார்சத்திரம், கொட்டையூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், காஞ்சீபுரம், சுங்குவார்சத்திரம் என சுற்றுவட்டார பகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமனுக்கு திருமஞ்சன மற்றும் வடை மாலை செலுத்தி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் மலை மேல் அமைந்துள்ள வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
கே.ஜி.கண்டிகையில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பெற்ற வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பல வண்ண பழங்களால் மாலை அணிவிக்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது.
Related Tags :
Next Story