தேயிலை தோட்டத்தில் களை கொல்லி மருந்து தெளிப்பு


தேயிலை தோட்டத்தில் களை கொல்லி மருந்து தெளிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2022 8:36 PM IST (Updated: 3 Jan 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்தில் களை கொல்லி மருந்து தெளிப்பு

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டத்தில் களை கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. 

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய விவசாயமாக தேயிலை விளங்கி வருகிறது. இதை நம்பி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக தேயிலைச்செடிகளுக்கு நடுவே ஏராளமான களைச்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் பசுந்தேயிலை மகசூல் குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மருந்து தெளிப்பு

எனவே பசுந்தேயிலை மகசூலை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் தங்களது தேயிலைத் தோட்டத்தில் களை கொல்லிகளை கட்டுப்படுத்த ரவுண்டப், கிளைசல் மற்றும் கிரம்மசோன் போன்ற களைக்கொல்லி மருந்துகளை தெளிப்பான்கள் மூலம் தெளித்து வருகிறார்கள். 

இது குறித்து கேர்கம்பை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, கிளைசல் களைக்கொல்லி மருந்து ஒரு லிட்டருக்கு ரூ.600 ஆகிறது. இதனைத் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டத்திற்கு தெளித்தால் களைசெடிகளை கட்டுப்படுத்துவதுடன், பசுந்தேயிலை அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.


Next Story