ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மீனவ கிராமத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு


ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மீனவ கிராமத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
x

ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மீனவ கிராமத்தில் அதிகாரிகள் நேரில் சென்று முகாமிட்டு வீடு வீடாக ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ளது நொச்சிக்குப்பம் என்ற மீனவ கிராமம். இங்கு வசித்து வரும் 43 வயதான மீனவர் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 15-ம் தேதி தனது மனைவியுடன் தங்கி சிசிச்சை பெற்றார். அவருக்கும், அவரது மனைவிக்கும் ஒமைக்ரான் தொற்று அங்கேயே கண்டறியப்பட்ட நிலையில் இருவரும் அதற்கான சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது வீடு திரும்பி உள்ளனர். அவர்களுக்கு தற்போது தொற்று அறிகுறி ஏதுவும் இல்லை என்றாலும், அவர்களை சுகாதாரத்துறையினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தரவும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்கண்ட 2 பேரும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதியில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று முகாமிட்டு வீடு வீடாக ஆய்வு செய்தனர்.


Next Story