மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பாதிரியார் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பாதிரியார் பலி
x
தினத்தந்தி 3 Jan 2022 9:37 PM IST (Updated: 3 Jan 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் நாகை மாவட்ட பாதிரியார் பலியானார்.

காரைக்கால், ஜன.
காரைக்காலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் நாகை மாவட்ட பாதிரியார் பலியானார்.
பாதிரியார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 58). நாகை மாவட்ட தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக  இருந்து வந்தார். 
இவர்   கடந்த   டிசம்பர் 29-ந் தேதி மாலை, நாகை மாவட்டத்தில் இருந்து தரங்கம்பாடிக்கு, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
காரைக்காலை அடுத்த திருபட்டினம் நாகை- காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி, சாலையில் சறுக்கி விழுந்தது. இதில் ஜெயச்சந்திரன் தவறி கீழே விழுந்ததில் உடலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சை பலனின்றி சாவு
இதுபற்றி தகவல் அறிந்த திருபட்டினம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயச்சந்திரனை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று ஜெயச்சந்திரன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த விபத்து குறித்து, திருபட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story