கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 7½ பவுன் நகை ‘அபேஸ்’


கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 7½ பவுன் நகை ‘அபேஸ்’
x
தினத்தந்தி 3 Jan 2022 9:53 PM IST (Updated: 3 Jan 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 7½ பவுன் நகை ‘அபேஸ்’

கோவை

நாமக்கல்லை சேர்ந்த விவசாயி பழனியப்பன்(வயது 75), கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை உடனிருந்து கவனித்து வரும் மனைவி காளியம்மாள்(70), பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். 

அப்போது அவரை, நுழைவு வாயிலில் நின்ற ஒரு ஆசாமி திடீரென ‘கோவிலுக்குள் நகை அணிந்து செல்லக்கூடாது’ என்றுக்கூறி தடுத்தார். உடனே நீங்கள் யார்? என்று காளியம்மாள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘நான் அரசு அதிகாரி, நகைகளை என்னிடம் கழற்றி கொடுத்துவிட்டு கோவிலுக்குள் செல்லுங்கள், நீங்கள் திரும்பி வரும்போது உங்களிடம் பத்திரமாக ஒப்படைத்து விடுவேன்’ என்றார்.  இதை நம்பிய காளியம்மாள், அணிந்திருந்த 7½ பவுன் நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்து அவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார். 

பின்னர் திரும்பி வந்தபோது, சற்றும் தாமதிக்காமல் அந்த பையை அவரிடம் கொடுத்துவிட்டு ஆசாமி சென்றுவிட்டார். உடனே அவர், அந்த பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்த நகைகளை காணவில்லை. அரசு அதிகாரி என்று கூறி அந்த ஆசாமி அவரை ஏமாற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story