நல்லம்பள்ளி அருகே ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
நல்லம்பள்ளி அருகே ஆசிரியை வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போனது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி பொதுப்பணித்துறை காலனி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது45). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 30-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு கோவிலுக்கு சென்றார். கடந்த 1-ந் தேதி அவர் மீண்டும் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story