‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Jan 2022 10:14 PM IST (Updated: 3 Jan 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி பகுதியில், 4 வழி சாலை ஓரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. இதேபோன்று செட்டிநாயக்கன்பட்டி குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகள், இறைச்சி கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெய்கணேஷ், திண்டுக்கல்.

செயல்படாத திருமண மண்டபம்

வேடசந்தூர் தாலுகா மோளபாடியூரில் அமைக்கப்பட்ட திருமண மண்டபம் செயல்படாமல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஏழை மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். திருமண மண்டபத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவக்குமார், மோளபாடியூர்.

ஆபத்தான பள்ளம் 

பெரியகுளம் தாலுகா சருத்துப்பட்டி அங்கன்வாடி மையம் முன்பு பெரிய அளவிலான பள்ளம் உள்ளது. அதனை முறையாக மூடாமல் அட்டை, கம்புகளை வைத்து மூடியுள்ளனர். அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் அந்த பள்ளத்தில் விழும் ஆபத்து உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகஜோதி, பெரியகுளம்.

போக்குவரத்துக்கு இடையூறு

திண்டுக்கல் மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், திண்டுக்கல்.

Next Story