நாய்களால் கடித்து குதறப்பட்ட 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்


நாய்களால் கடித்து குதறப்பட்ட 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 3 Jan 2022 10:15 PM IST (Updated: 3 Jan 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

நாய்களால் கடித்து குதறப்பட்ட 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறியதுடன், ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தில்லைநகர் விரிவாக்க பகுதியில் வசித்து வருபவர் சபரிநாத் (வயது 29). இவர் ஓசூரில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு 2 வயதில் அயனேஷ் என்ற குழந்தை உள்ளான். சபரிநாத் கடந்த மாதம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மனைவியின் தாயார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அபோது தமிழரசியின் தந்தையுடன் குழந்தை அயனேஷ், அங்குள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றான். பூங்காவில் அயனேஷ் விளையாடி கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் அவனை கடித்து குதறின. இதில் கண், தலை, முகம் உள்பட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று அதிகாலை தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஓசூரில் உள்ள சபரிநாத் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார்.

Next Story