ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பகல்பத்து உற்சவம் நேற்று காலையில் தொடங்கியது. முன்னதாக உடையவர் சன்னதியில் இருந்து கூரத்தாழ்வார் பிள்ளை, லோகாச்சாரியார், வேதாந்த தேசிகன் ஆகியோர் மேளதாளத்துடன் யானை முன்செல்ல ஊர்வலமாக வந்து சுவாமி நம்மாழ்வார் சன்னதியில் எழுந்தருளினர். தொடர்ந்து அரையர் திருப்பல்லாண்டு பாடப்பட்டது. பின்னர் பகல்பத்து மண்டபத்தில் பெருமாள் தாயார், நம்மாழ்வார், சேனை முதல்வர், 12 ஆழ்வார்களுடன் எழுந்தருளினர். தொடர்ந்து அரையர் அபிநய வியாக்கியானத்துடன் திருப்பல்லாண்டு பாடப்பட்டது.
Related Tags :
Next Story