தொழிலாளி மீது பீர்பாட்டிலால் தாக்குதல்; வாலிபர் கைது


தொழிலாளி மீது பீர்பாட்டிலால் தாக்குதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2022 10:22 PM IST (Updated: 3 Jan 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளி மீது பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவருடைய மகன் செல்வக்குமார் (வயது 36). தொழிலாளி. இவர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட டாஸ்மாக் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த கோயில்பிச்சை மகன் பாக்கியராஜ் (21) என்பவர் குடிபோதையில் செல்வக்குமாரிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் பீர்பாட்டிலால் செல்வக்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தார்.

Next Story