தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Jan 2022 10:27 PM IST (Updated: 3 Jan 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

குரங்குகளை பிடிக்க நடவடிக்கை
அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள காட்டுப்புதூர், தெற்கு காலனி பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் 3-1-2022 அன்று செய்தி வெளியிடப்பட்டது. உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே கல்படி தெரு பகுதியில் சாலையோரம் மின்பாதைகளுக்கு இடையூறாக நின்ற மரக்கிளைகள் வெட்டப்பட்டது. பின்னர் அந்த கிளைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, வெட்டப்பட்ட மரக்கிளைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                   -டி.ஜோணி, புதுக்குடியிருப்பு.
ஓடையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் பாய்ந்து செல்லாமல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
                                                   -பி.எஸ்.ராஜா, வெட்டூர்ணிமடம்.
சாலையோரம் ஆபத்து
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்துக்கல்லூரிக்கும் செட்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இன்டர்நெட், தொலைப்பேசி மற்றும் கேபிள் டி.வி. ஒயர்கள் தாறுமாறாக தொங்கி கொண்டிருக்கின்றன. மேலும் இந்த ஒயர்களை தாங்கி நிற்கும் கம்பமானது சாலையை நோக்கி சாய்ந்த வண்ணம் உள்ளது. இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மீது ஒயர்கள் விழுந்து ேபராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                     -மு.தர்மராஜன், அனந்தபத்மனாபபுரம்.
சாலை சீரமைக்கப்படுமா?
மேல்புறம் யூனியன் முழுக்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட உத்திரங்கோடு (ஊற்றுகுழி) முதல் தண்ணீர்பத்தாயம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கரடு முரடாக காணப்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                                            -டேவிட்,  நீராழித்தட்டுவிளை.
மாசு அடைந்த குடிநீர்
குலசேகரபுரம் பஞ்சாயத்தில் பல்பனாபன்புதூர் ஊரில் பொது குடிநீர் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த கிணறு சரியாக தூர்வாரப்படாமல் பாசிகள் நிறைந்து மாசு அடைந்து காணப்படுகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால் பல தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. மேலும் கிணற்றின் மேல் பகுதியில் இதுவரை மூடி  அமைக்கப்படவில்லை. எனவே, பொது குடிநீர் கிணற்றை தூய்மைப்படுத்தி, மூடி அமைத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -பி.அனிதா மலர், பல்பனாபன்புதூர்.

Next Story