பஸ்நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம்
தாராபுரம் புதிய பஸ்நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
தாராபுரம்
தாராபுரம் புதிய பஸ்நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள்.
பஸ் நிலையம்
தாராபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கடைகள் முழுவதும் ஏலம் விடப்பட்டது.அதனை ஏலம் எடுத்த நபர்கள் பலகாரம், டீ கடைகள், பழவகை விற்பனை கடைகளை நடத்தி வருகின்றனர்.அவர்கள் கடைகளை அனுமதித்த இடத்தைவிட கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வந்தால் பஸ் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் நகராட்சி ஆணையாளர் சங்கர் உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்களைக் கொண்டு பஸ் நிலையம் முழுவதும் உள்ள கடைக்காரர்களின் ஆக்கிரமித்துள்ள பொருள்களை அகற்றினர்.
எச்சரிக்கை
இதேபோன்று பஸ் நிலையத்தில் உள்ள வழித்தடத்தில் இருபுறமும் நடைபாதை வியாபாரிகள் பல ஆண்டு காலமாக நகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தாமல் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.அவைகள் அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதால் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது. நடைபாதையில் கடைகளை இனிமேல் வைக்கக்கூடாது என எச்சரித்து சென்றனர். ஆனால் தற்பொழுது கடந்த ஒரு மாத காலமாக பழைய நிலையில் கடை உரிமையாளர்கள் ஒதுக்கப்பட்ட கடைக்குள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யாமல் பயணிகள் பஸ் நிலையத்தில் அமர்ந்து செல்லவும், நடந்து செல்ல முடியாத வரை கடைகளை நடைபாதையில் மறைத்து வியாபாரம் நடத்தி வருகின்னர்.இதனால் பஸ் பயணிகள் வெளியில் வெயிலில் காத்து நின்று பஸ்சில் செல்வதாக புலம்புகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட கடையினுள் வைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story