சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல்
திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி:-
திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலக்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து அரசியல் கட்சியினா் மற்றும் வா்த்தகா்கள் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணியை சேர்ந்த இப்ராஹிம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ்,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒன்றிய தலைவர் ஹஜ்ஜாலி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் முஸ்தபா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் அருட்செல்வன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிளைத் தலைவர் சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தை
திருப்பூண்டியில் 1884-ம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் இங்கு தொடர்ந்து 138 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது பத்திரப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், திருமணங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதால் 28 கிராமங்களை சேர்ந்த மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இந்த அலுவலகம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ந போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் அமுதா மற்றும் திருப்பூண்டி சார்பதிவாளர் பாரதிமோகன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது கீழ்வேளூர் வட்டத்திற்குட்பட்ட கீழையூர் மற்றும் வேளாங்கண்ணி சரக வருவாய் கிராமங்களை திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இணைத்து திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட பதிவுத்துறையின் மூலம் கருத்துரு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை - திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட
Related Tags :
Next Story