வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 Jan 2022 11:25 PM IST (Updated: 3 Jan 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பகுதியில் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயிர்கள் மூழ்கி நாசமடைந்ததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பகுதியில் வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயிர்கள் மூழ்கி நாசமடைந்ததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
வயலில் தேங்கிய மழைநீர்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கி குளம் போல காட்சி அளிக்கிறது. மழை நின்று 2 நாட்களாகியும் மழைநீர் வடியாததால் விளை நிலங்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க பம்புசெட் மூலம் தண்ணீைர இறைத்து வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.  
ரூ.30 ஆயிரம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலமருதூர், பிச்சன்கோட்டகம் வடபாதி, எக்கல், கடம்பவிளாகம் பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் தண்ணீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிப்பு நிலவரங்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story