கிணற்றில் தவறி விழுந்த மாணவன் சாவு
கண்ணமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு காலனியை சேர்ந்தவர் மணி. அவரது மகன் மணீஷ் (வயது 7), 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மணீஷ் தனது வீட்டருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, மணீஷை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மணீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story