தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 3 Jan 2022 11:37 PM IST (Updated: 3 Jan 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் உள்ள முதலியார் தெருவில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், முதலியார்தெரு, திருச்சி. 

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் முதல் பெரம்பலூர் வரை செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.  எனவே பெரம்பலூர் முதல் லெப்பைக்குடிக்காடு வரை இயக்கப்படும் அரசு பஸ்கள் மற்றும் நகர பஸ்களை அகரம்சீகூர் வரை இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன், அகரம்சீகூர், பெரம்பலூர்.

செயல்படாத குடிநீர் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் மலை அடிவாரம் சன்னதி தெருவில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் செலவில் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையம் அமைக்கப்பட்டு 5 நாட்கள் மட்டுமே இயங்கியது. அன்று முதல்  கடந்த 2 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மூடியுள்ள குடிநீர் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விராலிமலை, புதுக்கோட்டை. 

வேகத்தடை அமைக்கப்படுமா? 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மெயின் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலை வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் பெரிய கடைவீதி சந்து அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரவக்குறிச்சி, கரூர். 

பஸ் நிலையத்தில் உருவான பள்ளங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற 81 அடி உயரம் கொண்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ள மெய்நின்றநாதர் ஆலயமும் உள்ளதால் இங்கு தினமும் அதிகளவில் வெளியூர் பக்தர்களும் பஸ் மூலம் வந்து செல்கின்றனர். பஸ் ஒருவழியாக உள்ளே சென்று மறுவழியாக வெளியே வரும் வகையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் இரு வழிகளும் பருவமழையால் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பஸ் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும்  மழைநீர் தேங்கி நின்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை. 

பயனற்ற ஆழ்துளை கிணறு 
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூர் பகுதி மக்களின் நலன் கருதி, அவர்களின்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வேலாயுதம்பாளையம்-நொய்யல் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு முத்தனூரில் உள்ள  மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு  பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆழ்துளை கிணறு செயல்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முத்தனூர், கரூர். 

விபத்துகள் தடுக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், தி௫வெறும்பூர் மலைக்கோவில் பஸ் நிறுத்தத்தில் திருச்சி-தஞ்சை  சாலையின் நடுவே தடுப்பு இல்லாததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருச்சி-தஞ்சை சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் சாலையை கடக்க முயலும் பொதுமக்கள், வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனை தடுக்க சாலையில் வேகத்தடை அல்லது பேரிகார்டு வைக்க வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கரன், திருவெறும்பூர், திருச்சி. 

சாலையில் பள்ளம்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெரிய மிளகுப்பாறைக்கு செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அருகில் சென்று பிரேக் அடிப்பதினால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர  வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வருமா? 
திருச்சி மாவட்டம், சமயபுரம் புது பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பல்லாயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்கள் சமயபுரம் வந்த வண்ணமாக உள்ளனர். பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி செயல்படாமல் உள்ளது. மேலும் புது பஸ்  நிலையத்தின் முன்புறம் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை காலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையம் முன்பு பழுதடைந்த சாலையை சீரமைத்து பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சமயபுரம், திருச்சி. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு அம்பாள் நகர் பகுதியில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் கொசுத்தொல்லையால் இரவு நேரத்தில் தூக்கத்தை இழந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அம்பாள்நகர், திருச்சி. 

தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி 7-வது வார்டு அரியமகளம் அம்மாக்குளத்தில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவறை கழிவுநீரால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அம்மாக்குளம், திருச்சி. 


Next Story