ஆறுகளில் மணல் குவாரி அமைக்கக்கூடாது; குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
ஆறுகளில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 353 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகபட்சமாக ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ள மனுக்கள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க இயலுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நடவடிக்கை
மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் செய்திகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுவில் தினமும் பகிரப்படுகின்றது. அதன் அடிப்படையில், உரிய அலுவலர்கள் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
முன்னதாக 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ.9 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.
குவாரிஅமைக்கக்கூடாது
கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கடந்த காலத்தில் அறிவித்தபடி தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் இயற்கை ஆற்று மணல் இறக்குமதி செய்ய வேண்டும்.
எம் சாண்ட் உற்பத்தியை தடை செய்தும், தமிழக ஆறுகளில் ஆற்று மணல் புதிய குவாரிஅமைக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story