மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலியானார்.
நொய்யல்,
மண்மங்கலம் அருகே சியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 65). இவர் வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான டெக்டைல்சில் பேக்கிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தளவாபாளையம் அருகே கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் காரை அதிவேகமாக ஓட்டி வந்தார். அப்போது ஜெயராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இதில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த ஜெயராமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயராமை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார்த்திக்கேயன் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story