சந்தானராமர் கோவிலில் உற்சவம் தொடங்கியது
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
நீடாமங்கலம்;
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது.
சந்தான ராமர் கோவில்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலையில் சந்தானராமர் ஏகாந்த சேவையில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேதவிற்பன்னர்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்து ராமபிரானை ஆராதனை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) வரை பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது.
ராப்பத்து
13-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவும், அன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. 22-ந் தேதி மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக அலங்காரம், சுவாமி திருவீதி புறப்பாடு நடக்கிறது. விழா நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாலாயிர திவ்யபிரபந்த பாராயண ஏற்பாடுகளை முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியும், விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமேஷ், ஆய்வாளர் தமிழ்மணி, செயல்அலுவலர் சத்தியசீலன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story