குளியலறையில் இறந்து கிடந்த பெண்


குளியலறையில் இறந்து கிடந்த பெண்
x
தினத்தந்தி 3 Jan 2022 11:55 PM IST (Updated: 3 Jan 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே வீட்டு குளியலறையில் இறந்து கிடந்த பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால், ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குலசேகரம்:
குலசேகரம் அருகே வீட்டு குளியலறையில் இறந்து கிடந்த பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்ததால், ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முந்திரி ஆலை தொழிலாளி
குலசேகரம் அருகே உள்ள சூரியகோடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட், ரப்பர் பால்வெட்டும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராதா (வயது 40). முந்திரி ஆலை தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
நேற்று அதிகாலையில் வழக்கம் போல் வின்சென்ட் ரப்பர் பால்வெட்டும் வேலைக்கு சென்று விட்டார். காலை 6 மணிக்கு வின்ெசன்ட் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, குளியல் அறையில் ராதா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இறந்து விட்டார்
உடனே, வின்சென்ட் ராதாவை சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுபற்றி தகவலறிந்த குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
ஆஸ்பத்திரி முற்றுகை 
 ஆனால், அங்கு பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் இல்லை எனவும், ராதாவின் உடலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது. 
இதைகேட்டு ஆத்திரமடைந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இங்கேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி இங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story