மினி லாரியில் கடத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மினி லாரியில் கடத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக் தலைமையிலான குழு சேலம் மெயின் ரோடு அருகே சோதனை செய்தனர். அப்போது சென்னையிலிருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது பண்டல் பண்டலாக 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்.
துப்புரவு ஆய்வாளர் விவேக் கூறுகையில் பிடிபட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story