வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யக்கூடாது. ஊராட்சிமன்ற தலைவர்கள் தீர்மானம்


வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யக்கூடாது. ஊராட்சிமன்ற தலைவர்கள் தீர்மானம்
x
தினத்தந்தி 3 Jan 2022 11:57 PM IST (Updated: 3 Jan 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய குழுகு தலைவருக்கு எதிராகவும் ஊராட்சிமன்ற தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

சோளிங்கர்

சோளிங்கர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய குழுகு தலைவருக்கு எதிராகவும் ஊராட்சிமன்ற தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

பணம் கேட்பதாக குற்றச்சாட்டு

சோளிங்கர் ஒன்றியத்துக்குட்பட்ட 40 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் போளிப்பாக்கம் கார்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்குப்பட்டு பாலுசந்தர் முன்னிலை வகித்தார். 

ஆலோசனை கூட்டத்தில் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலராக அன்பரசன் பணியாற்றி வருகிறார். இவர் தொகுப்பு வீடுகளை வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் ஒரு வீட்டுக்கு 20 ஆயிரம், கேட்பதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் கலைக்குமார் அழுத்தம் கொடுத்து வருவதாக  தகவல் கிடைத்தது. ஆனால் தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதற்கு எந்த பயனாளிகளிடமும் பணம் பெற்றுத் தரும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. கேட்டதும் இல்லை. 

ஒன்றியக்குழு தலைவர் தலையீடு

உண்மை இவ்வாறு இருக்க பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது ஏற்புடையது அல்ல. 
எனவே பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலரை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது எனவும், ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகளிலும், பணிகளிலும் ஒன்றியக் குழு தலைவரும், ஒன்றியக் குழு உறுப்பினர்களும் தலையிடக் கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story