கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்


கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:24 AM IST (Updated: 4 Jan 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி, 

காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பலவான்குடி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி(21) என்பவருடன் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் ராஜபாண்டி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் செய்ததன் பேரில் ராஜபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

Next Story