விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2022 6:55 PM GMT (Updated: 2022-01-04T00:25:09+05:30)

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

வள்ளியூர்:

நாங்குநேரி அருகே உள்ள பூலம் ஆயனேரி காந்தி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). விவசாயி. இவர் பொருட்கள் வாங்குவதற்காக வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். 

வள்ளியூர் பைபாஸ் ரோட்டில் கேசவனேரி சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த போது வடுகச்சிமதிலை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் சுப்பிரமணியனை வழிமறித்து கத்தியை காட்டி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணியன் பணம் இல்லை என்று கூறியதால் அவருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர்.

Next Story