திற்பரப்பு-மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


திற்பரப்பு-மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:30 AM IST (Updated: 4 Jan 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், நேற்று திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருவட்டார்:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், நேற்று திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 31-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.அந்த தடை நேற்று காலையில் இருந்து நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பேச்சிப்பாறை அணை, பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
திற்பரப்பு-தொட்டி பாலம்
தற்போது, கோதையாற்றில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் விழுகிறது. இதனால், அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சபரிமலை சீசன் நேரம் என்பதாலும் அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் திற்பரப்புக்கு வந்து குளித்து விட்டு சென்றனர்.
இதேபோல், ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் என பெருமை மிக்க மாத்தூர் தொட்டி பாலத்தையும் கண்டு களிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள், பாலத்தை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். 

Next Story