ராணி வேலுநாச்சியார் பெயரில் சாதனை பெண்களுக்கு விருது வழங்க நடவடிக்கை -அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
ராணி வேலுநாச்சியார் பெயரில் சாதனை பெண்களுக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
சிவகங்கை,
ராணி வேலுநாச்சியார் பெயரில் சாதனை பெண்களுக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
அமைச்சர் மாலை அணிவிப்பு
சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலில் சுதந்திர போரை தொடங்கிய ராணி வேலு நாச்சியாரின் 292-வது பிறந்த தினவிழாவையொட்டி சிவகங்கை தொண்டி ரோட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), காரைக்குடி மாங்குடி (காரைக்குடி), மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மதன்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் தென்னவன், இளைய மன்னர் மகேஷ்துரை, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மணிமுத்து (காஞ்சிரங்கால்), மலைச்சாமி (சூரக்குளம்), சுரேஷ் (வாணியங்குடி), ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் துரைஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார்.முடிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.
விருது
பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது:-
ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினவிழா மகளிர் தின விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். அவரது பெயரில் விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருது வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரது உருவ சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அது குறித்து முதல்- அமைச்சரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story