குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:47 AM IST (Updated: 4 Jan 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல் காதர், தனி துணை கலெக்டர் ஷீலா, பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 424 மனுக்கள் பெறப்பட்டன.
தென்காசி அருகே உள்ள மேல பாட்டாகுறிச்சி வார்டு உறுப்பினர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். 

அந்த மனுவில், “எங்களது வார்டில் 103 வீடுகள் உள்ளன. இதில் பஞ்சாயத்தில் இருந்து வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் 45 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆழ்துளை கிணற்றின் மோட்டார்களையும் காணவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் விரைவில் சாலை மறியல் போராட்டத்திற்கு முடிவு செய்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story