பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
சிவகங்கை,
15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
பள்ளி மாணவ-மாணவிகள்
தமிழகத்தில் நேற்று முதல் சுகாதாரத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட தொடங்கி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இதன் தொடக்க விழா சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவைகளில் 273 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட 62 ஆயிரத்து 522 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது,
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), துணை இயக்குனர்கள் ராம் கணேஷ் (பொது சுகாதாரத்துறை), யோகவதி (குடும்பநலம்), முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடியில் உள்ள எஸ்.எம்.எஸ். ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் பார்கவி தடுப்பூசி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.எம்.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எல்.பழனியப்பன், இந்திய செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் ஆசிரியர் சுந்தரராமன், ஓவிய ஆசிரியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு சுகாதார துறையினர், செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story