குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:51 AM IST (Updated: 4 Jan 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி:
3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொரோனா விதிமுறை காரணமாக சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து சென்றனர்.

ஆங்கில புத்தாண்டு தினத்தில் அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதாலும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சம் காரணமாகவும் கடந்த 31-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

உற்சாக குளியல்

நேற்று முதல் அந்த தடை நீங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மிதமான மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. அருவிகளில் குளிக்க வருபவர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணை கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும். அதற்கான சான்று இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.



Next Story