போலி நகைகளை அடகு வைத்த தாய்-மகன் கைது


போலி நகைகளை அடகு வைத்த தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 4 Jan 2022 1:56 AM IST (Updated: 4 Jan 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
போலி நகை
நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் ராமன்புதூர் பகுதியை சோ்ந்த முகமது அப்துல் காதரின் மனைவி சபியா (வயது 50) மற்றும் மகன் அபுபைசல் ஆகியோர் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்கம்.
 அதுபோல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சபியாவும், அபுபைசலும் சோ்ந்து அதிகளவிலான நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து சந்திரசேகரன் அந்த நகைகளை ஆய்வு செய்தார். அப்போது தான் அந்த நகைகள் போலியானது என தெரிய வந்தது.
கைது
இதுதொடர்பாக சந்திரசேகரன் நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி நேசமணி நகர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சபியா மற்றும் அபு பைசல் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சபியா, அபு பைசல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story