பர்கூர் மலை கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
பர்கூர் மலை கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தார்கள்.
அந்தியூர்
பர்கூர் மலை கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தார்கள்.
கஞ்சா செடிகள்
பர்கூர் மேற்கு மலைப்பகுதியில் உள்ள ஆலனை கிராமத்தில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் ஏட்டுகள் முருகன், தேவராஜ், ஆனந்த் மற்றும் போலீசார் ஆலனை கிராமத்தில் கண்ணப்பன் என்ற விவசாயிக்கு சொந்தமான மக்காச்சோள தோட்டத்தை சோதனையிட்டார்கள்.
அப்போது மக்காச்சோள செடிகளுக்குள் கஞ்சா செடிகளும் வளர்க்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 18 கஞ்சா செடிகளை போலீசார் பறித்து பறிமுதல் செய்தார்கள்.
கைது
மேலும் கண்ணப்பனை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர் கஞ்சா செடிகளை வளர்த்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனை கைது செய்தார்.
மேலும் அவர் ஏற்கனவே கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்துள்ளாரா?, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story