சென்னிமலை அருகே இரும்பு உருக்கும் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகை
சென்னிமலை அருகே இரும்பு உருக்கும் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
சென்னிமலை
சென்னிமலை அருகே இரும்பு உருக்கும் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
இரும்பு உருக்கும் தொழிற்சாலை
சென்னிமலை அருகே உள்ள செலம்பகவுண்டன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பழைய இரும்புகளை கொண்டு வந்து அதனை உருக்கி கட்டிகளாக தயார் செய்கிறார்கள்.
இந்த தொழிற்சாலைக்குள் இரும்புகளை உருக்கும் போது அதில் இருந்து புகை வெளியேறுவதால் சுவாச கோளாறு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபட்டு வருவதாக அப்பகுதியில் வகிக்கும் பொதுமக்கள் புகார் கூறி வந்தார்கள்.
முற்றுகை
இந்தநிலையில், அப்பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் நேற்று காலை 10 மணியளவில் ஒன்று திரண்டு விதிமுறைகளுக்கு மாறாக ஏன் புகையை வெளியேற்றுகிறீர்கள?் எனக்கூறி சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை முற்றுகையிட்டார்கள்.
அப்போது தொழிற்சாலைக்கு பழைய இரும்பு பாரம் ஏற்றி வந்த ஒரு லாரியை உள்ளே விடாமல் சிறைபிடித்தார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீசார் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நடவடிக்கை
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் போலீசாரிடம், இரும்புகளை உருக்கும் போது விதிமுறைகளை பின்பற்றி புகை போக்கி வழியாக வெளியேற்றாமல் அப்படியே வெளியேற்றுகின்றனர். இதனால் எங்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. செடி, கொடிகளிலும் மாசு படர்கிறது. அதனால் விதிமுறைகளுக்கு மாறாக புகையை வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story