புதிய மின் இணைப்பு பெற மறைமலைநகரில் விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
புதிய மின் இணைப்பு பெற மறைமலைநகரில் விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம் நடைபெறும்.
மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர், செங்கல்பட்டு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், ஆகிய தாலுகாவில் அடங்கிய கிராமங்களில் புதிய விவசாய மின் இணைப்பு வேண்டி விவசாயிகள் நாளை (புதன் கிழமை) அன்று மறைமலைநகர் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கு பெறலாம்.
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் இரா.மணிமாறன் அறிவுறுத்தலின்படி நேற்று செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் பெரும்பேர்கண்டிகை, மின்னல் சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைபுத்தூர், நுகும்பல், சூனாம்பேடு, சிறுமைலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்வரன் துரைராஜ் தனசேகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தேவநாதன் வணிக ஆய்வாளர் சரவணன், அச்சரப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளர் கு.கிறிஸ்டோபர் லியோராஜ் பங்கேற்றார்.
Related Tags :
Next Story