கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 4 Jan 2022 6:52 PM IST (Updated: 4 Jan 2022 6:52 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

மன்னார்குடி:-

மன்னார்குடியில் உள்ள தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வயது பூர்த்தி அடைந்த மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை ஜெபமாலை, மன்னார்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர் சிவபிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் மன்னார்குடி வட்டார மருத்துவ அலுவலர் ஆகாஷ் தலைமையில் செவிலியர் சவீதா, கோகிலா, ஆயிஷா ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர். முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரபாகரன், மணிமோகன், பேராசிரியர்கள் நேதாஜி, முருகானந்தம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், சுகாதர பரப்புரையாளர்கள் கார்த்திகேயன், சங்கீதா, கல்லூரி அலுவலக இளநிலை உதவியாளர் மங்கையர்கரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story