பொங்கல் பண்டிகைக்கு தனித்தனி சிறப்பு பஸ்கள்


பொங்கல் பண்டிகைக்கு தனித்தனி சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 7:05 PM IST (Updated: 4 Jan 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகைக்கு தனித்தனி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.

மதுரை, 
பொங்கல் பண்டிகைக்கு தனித்தனி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
பேட்டி
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போக்கு வரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும், பாதிப்பு குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது முழு வீச்சில் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். பொங்கல் பண்டிகைக்கு தனித்தனியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
 தீபாவளி பண்டிகைக்கு பஸ்கள் எப்படி இயக்கப்பட்டதோ, அது போல் கூட்ட நெரிசலை தவிர்க்க பஸ்கள் இயக்கப்படும். இதனால் கொரோனா பரவல் ஏற்படாது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். 
காலிப்பணி இடம்
தேர்தல் மற்றும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய பஸ்கள் வாங்க ஏற்பாடு நடைபெற உள்ளது. போக்குவரத்து பணிமனைகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விகிதாச்சார அடிப்படையில் நிரப்பப்படும். தேர்தல் மற்றும் பண்டிகைகள் முடிந்தவுடன் முதல்- அமைச்சரின் ஆலோசனைக்கு பிறகு பணியிடங்கள் அமைக்கப்படும் என்றார்.

Next Story